5 மாநில தேர்தலில் கட்சிகள் பெற்றதை விட நோட்டாவுக்கு அதிகவாக்கு

புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளை விட நோட்டாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளது. சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் முந்தைய தேர்தலை விட கூடுதல் வாக்குகள் நோட்டா எனப்படும் யாருக்கும் வாக்களிக்க  விரும்பவில்லை என்ற சின்னத்துக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டீஸ்கரில் 2.1 சதவீதம் அளவுக்கும், மிசோரத்தில் 0.5 சதவீதம் அளவுக்கும் நோட்டாவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 1.5 சதவீதம், தெலங்கானாவில் 1.1 சதவீதம், ராஜஸ்தானில் 1.3 சதவீதமும் நோட்டா  வாக்குகள் பதிவாகியுள்ளன.

சட்டீஸ்கரில் நோட்டாவுக்கு 2.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், ஆம் ஆத்மி 0.9 சதவீதம் வாக்குகளும், சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 0.2 சதவீத வாக்குகளும், சிபிஐ 0.4 சதவீத வாக்குகளும்  பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாடிக்கு 1 சதவீதமும், ஆம் ஆத்மிக்கு 0.7 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன. இதேபோல் ராஜஸ்தானில் 1.3 சதவீதம் நோட்டாவுக்கு கிடைத்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் 1.3  சதவீதமும், சமாஜ்வாடி 0.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. ஆம் ஆத்மி மற்றும் ராஷ்டிரிய லோக்தளம் தலா 0.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.தெலங்கானாவில் தேசியவாத காங்கிரஸ் 0.2, சிபிஎம் 0.4,  சிபிஐ 0.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. மிசோரமில் பிஆர்ஐஎஸ்எம் கட்சிக்கு 0.2 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: