தமிழகத்தில் 7.54 கோடியில் கட்டப்பட்ட நாகை, திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் 5 பாலம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ₹7.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 பாலங்கள், கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்காக ₹2 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை  செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், தரங்கம்பாடி மணக்குடி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், தேசிய நெடுஞ்சாலை - பனப்பாக்கம்  சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம், ராமகிருஷ்ணராஜ்பேட்டை ஊராட்சி ஒன்றியம், அம்மையார் குப்பம் - மேல் மோசூர் சாலையில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராமச்சந்திரபுரம் -  கல்லமேட்டுகாலனி சாலையில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம்,திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஊராட்சி ஒன்றியம், பேரளம் - அன்னியூர் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ₹7 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மற்றும் 5  பாலங்களையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, இயக்குநர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: