20 தொகுதிக்கு தேர்தல் நடக்கும் பட்சத்தில் பொது தேர்தலை சந்திக்காமலே திமுக ஆட்சியை பிடிக்கும்: வைகோ-திருமா பேட்டி

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல்  நீடித்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,  நீர் அடித்து நீர் விலகாது. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது. அது போலதான் நானும், திருமாவளவனும். அனைத்து சமூக மக்களுக்கான இளம் தலைவர் திருமாவளவன். திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அணி வலுவாக உள்ளது.  கலைஞர் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெறும். 20 தொகுதிக்கான தேர்தல் நடந்தால் திமுக அணிதான் வெல்லும். இதில், வென்றாலே திமுக பொதுத்தேர்தலை சந்திக்காமலேயே ஆட்சியை பிடிக்கும். நாடாளுமன்ற தேர்தல்  அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், ‘மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் 30 ஆண்டுகளாக நட்போடு இருக்கிறேன். திமுக கூட்டணி அமைவதற்கு முன்பு உடையும் என்று சிலர்  கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்த சக்தியும் எங்கள் அணியை சிதறடிக்க முடியாது. என்னாலும், வைகோவாலும் அணிக்கு எந்த பாதிப்பும் வராது. 5 மாநில தேர்தலின் மூலம் மோடி வீழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது  நிரூபணமாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: