×

திருவனந்தபுரத்தில் பாஜ முழு அடைப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று பாஜ சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.சபரிமலையில் போலீஸ் தடை உத்தரவு மற்றும் கெடுபிடியை நீக்கக் கோரி பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி நேற்று முன்தினம் பா.ஜ. மற்றும் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் தலைமை செயலகம் நோக்கி கண்டன பேரணி நடத்தினர். அப்போது வனமுைற ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தியும்,  கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சு மற்றும் தடியடியில் 8 பா.ஜ. பெண் தொண்டர்கள், 3 போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை திருவனந்தபுரம் மாவட்டத்தில் பாஜ சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோ, கார்கள் ஓடவில்லை.நெய்யாற்றின்கரையில் சென்ற அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. நேற்று முதல் பள்ளி அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்தன. பிளஸ் 1, பிளஸ் 2க்கு நேற்று நடப்பதாக  இருந்த தேர்வுகள் வரும் 21ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 10ம் வகுப்புக்கான நேற்றைய தேர்வுகள் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 21ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ரயிலில் வந்த  நோயாளிகளை மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தங்களது வேன்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். குமரிபஸ்கள் களியக்காவிளையி்ேலயே நிறுத்தப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhavana ,Trivandrum , Bhavana, blocking , Trivandrum
× RELATED “கோரிக்கைகள் உண்மையானவை…” பாவனா...