அபராதம் செலுத்தினால் மட்டுமே மனுவை ஏற்க முடியும் நிதியமைச்சர் ஜெட்லிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர் அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே மனுவை ஏற்க முடியும் என்று  தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் மத்திய நிதியமைச்சர் அருண்ெஜட்லிக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், நிதியமைச்சர் ரிசர்வ் வங்கியின் பணத்தை அபகரிக்க  முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அபராத தொகையை செலுத்தும் வரை மனுதாரரின் எந்த மனுவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்று  உத்தரவிட்டனர். இந்நிலையில் வழக்கறிஙர் சர்மா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது மீண்டும் ஒரு பொதுநலன் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.  ரிசர்வ் வங்கி குழப்பத்தில் உள்ளதாகவும், அதன் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா  செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். இைத விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மனுதாரர் ரூ.50 ஆயிரம் அபராதத் தொகையை செலுத்தும் வரை அவரது புதிய மற்றும் பழைய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று  கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: