பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அலுவலருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: பட்டா வழங்க 4500 லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சி.சேகர். இவர், கடந்த 2011ம் ஆண்டு, தனது நண்பர்களுக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா வாங்க மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, வருவாய்த்துறை உதவியாளர் ரா.சேகர் பணியில் இருந்துள்ளார். அவர், சி.சேகரிடம் கொடி நாள் என்று கூறி 500 வாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து, பட்டா வேண்டுமென்றால் 4500 தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எனவே கடும் மன உளைச்சலுக்கு ஆளான சி.சேகர், இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். பின்னர் சேகர், போலீசாரின் அறிவுறுதலின்படி பணத்தை வழங்கினார். அப்போது பதுங்கியிருந்த போலீசார், லஞ்சம் வாங்கிய சேகரை கைது செய்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு  லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பூர்ணிமா தேவி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ரா.சேகர் இந்த வழக்கில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: