வியாசர்பாடி அன்னை சத்யா நகர், சஞ்சய் நகரில் லிப்ட் வசதியுடன் கூடிய குடியிருப்பு கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

வியாசர்பாடி: முன்னறிவிப்பு இல்லாமல் குடியிருப்புவாசிகளை வலுக்கட்டாயமாக வீடுகளை காலி செய்யும்படி தமிழக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஈடுபடுவதாகவும், லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர், அன்னை சத்யா நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளை அகற்றிவிட்டு, லப்ட் வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் சென்னை கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு, தங்களை வலுக்கட்டாயமாக வீடுகளை காலி செய்யும் பணியில் தமிழக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஈடுபடுவதாக புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வியாசர்பாடி சஞ்சய் நகர், அன்னை சத்யா நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ள எங்களை, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திவிட்டு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக கூறுகிறார்கள். நாங்கள் முறையாக குடிநீர், மின்சாரம், வீட்டு வரி ஆகியவை கட்டி வருகிறோம். எங்களிடம் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்றிதழ் என அனைத்து சான்றிதழ்களும் உள்ளன. நாங்கள் வசிக்கும் வீட்டை, எங்களுக்கு தேவையானபடி நாங்களே கட்டி கொள்கிறோம். எங்களுக்கு லிப்ட் வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம். எங்களுக்கு பட்டா வழங்கினால் போதும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: