மெரினாவில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு பட்டினப்பாக்கத்தில் மீன் மார்க்கெட்

சென்னை: மெரினாவில் சாலையோரம் மீன் விற்பனை செய்பவர்களுக்கு பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகில் உள்ள சாலையில் பல மீனவர்கள் சாலை ஓரத்தில் மீன் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மீனவர்களுக்கு மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளதா?, சாலையில் மீன் விற்கும் மீனவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்கவும் உத்தரவிட்டடுள்ளது. இந்நிலையில், சாலையில் மீன் விற்பனை செய்யும் மீனவர்களுக்கு புதிய மீன் மார்க்கெட் அமைக்க  சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் அருகே உள்ள  சாலைகளில் மீனவர்கள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு 800 மீட்டர் அளவிற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இவர்கள் அனைவருக்கும் அங்குள்ள குடிமை மாற்று வாரிய குடியிருப்பின் உள்பகுதியில் புதிய மீன் மார்க்கெட் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: