விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் நீர்வள ஆதாரங்களை பெருக்க 6 ஆயிரம் கோடியில் திட்டம்

சென்னை: விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் நீர்வள ஆதாரங்களை பெருக்க 6 ஆயிரம் கோடி செலவில் புதிய திட்டங்களை கொண்டு வருவது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சார்பில் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கழகத்தில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, மாநில நீர்வள மேலாண்மை முகமை இணைக்கப்பட்டுள்ளது. இந்த கழகத்தின் மூலம் நீர்வளத்துறையில் மத்திய அரசு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மூலம் 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் கோடி செலவில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத்தை மேம்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்கள் சார்பில் பயிலரங்கம் நடந்தது. இதில், நீர்வளத்துறை மேம்பாட்டு குழுவில் உள்ள அதிகாரிகள், நீர்நிலவள திட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, புவிசார் தகவல் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் நீராதாரத்தை பெருக்குவதற்கான புதிய திட்டங்களை கொண்டு வருவது தொடர்பாக இந்த பயிலரங்கத்தில் எடுத்து வைக்கப்பட்டது.  இந்த பயிலரங்கில், தமிழகத்தில் எந்த மாதிரியான பகுதிகளில் புதிய திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று அந்த நிறுவனங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தனியார் நிறுவனங்கள் பரிந்துரையின் படி 6 ஆயிரம் கோடி செலவில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகளை தயார் செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: