×

மீனாட்சி கோயில் தேரோட்டத்தை நினைவூட்டும் வகையில் மதுரையில் அழகுமிகு கருங்கல் ‘தேர்’ சிற்பம்

மதுரை: மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டத்தை நினைவூட்டும் வகையில் திண்டுக்கல் ரோட்டில் பாத்திமா கல்லூரி சந்திப்பு பகுதியில் கருங்கல்லில் செதுக்கி வடிவமைத்த ‘தேர்’ இன்று முதல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மையான புராதன சின்னங்கள் திட்டத்தின் கீழ் நகரின் முக்கிய சந்திப்புகளான பாத்திமா கல்லூரி சந்திப்பு, பழங்காநத்தம் சந்திப்பு, செல்லூர் சந்திப்பு, திருப்பரங்குனறம் மூலக்கரை சந்திப்பு ஆகிய பகுதிகளில் மதுரையின் பாரம்பரியத்தை அறியும் வகையில் பத்துத்தூண், விளக்குத்தூண் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. ரூ.2 கோடி செலவில் இதற்கான மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், மதுரை பாத்திமா கல்லூரி சந்திப்பில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி கோயில் தேரோட்டத்தை குறிக்கும் வகையில் ரூ.40லட்சம் செலவில் ‘தேர்’ அமைக்கப்பட்டுள்ளது.  கருங்கல்லால் இந்த தேர் 12 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை இத்தேரில் விளக்குகள் எரியவிடப்படும். மக்கள் பார்வைக்காக இன்று இந்த தேர்  திறக்கப்பட்டுள்ளது.  புதிய தேர் சிற்பத்தை மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் இன்று காலை ஆய்வு செய்தார். உதவி இன்ஜினியர் பாஸ்கர் இந்த தேர் அமைப்பு குறித்து விளக்கினார். இந்த தேர் வடிவம் முன்பு, பொதுமக்கள் ‘செல்பி’  குதூகலமடைந்து வருகின்றனர்.  மாநகராட்சி சார்பில் ஏற்கனவே ஆரப்பாளையம் சந்திப்பில் ‘ஜ்லிக்கட்டு காளை’ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏனைய பகுதிகளிலும் மதுரையின் பழமையை நினைவூட்டும்  வகையில் பல்வேறு மாதிரிகள் அமைக்கப்பட்டு, ‘தொன்மை நகரான’ மதுரையின் அழகினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meenakshi ,Madurai , Meenakshi temple, thermal plant, Madurai, the beauty of the temple, the 'Chari' sculpture
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...