×

நாகர்கோவிலில் குண்டும், குழியுமான நெடுஞ்சாலையில் பேட்ச் ஒர்க்

நாகர்கோவில்: நாகர்கோவில் நகர பகுதியில் சேதமான நெடுஞ்சாலைதுறையின் கீழ் உள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் போடும் பணி நடந்தது. குமரி மாவட்டத்தில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலப்பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மாற்றுப்பாதைகள் அதிகளவு சேதமாகியுள்ளது. மேலும் சமீபத்தில் பெய்த மழையால் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளும் சேதமாகி உள்ளன. சாலைகள் மோசமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் விபத்துக்களும் அதிகளவில் நடக்கிறது. எனவே மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நாகர்கோவில் நகர பகுதியில் சேதமான நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் பேட்ஜ் ஒர்க் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதிகமாக வாகன போக்குவரத்து உள்ள இது போன்ற சாலைகளில் உள்ள குண்டு, குழிகளில் ஜல்லி நிரப்பி அதன் பின்னர் தார் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளில் சாலைபணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் டெரிக் முதல் ராணித்தோட்டம் வரையுள்ள சாலை, பாலமோர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பேட்ஜ் ஒர்க் நடந்துள்ளது.  இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலப்பணிகள் நடந்துவருவதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் மாற்றுப்பாதைகள் சேதமாகியுள்ளது.  பாலப்பணிகள் முடிந்த பிறகு சேதமான சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும். தற்போது நகர பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாலப்பணிகள் முழுமையாக முடிந்து வாகன போக்குவரத்து தொடங்கியதும். பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : highway ,Nagercoil , Nagarcoil, Kundum, pit, highway, patch work
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!