பட்டகசாலியன்விளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா

நாகர்கோவில்: நாகர்கோவில் பட்டகசாலியன்விளை முத்தாரம்மன் கோயில் 3 நாள் ெகாடை விழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை கணபதிஹோமம், சிவன்கோயில் சிறப்பு பூஜை, சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு பூஜை, விநாயகருக்கு சிறப்பு பூஜை, அம்மனுக்கு அபிஷேகம், மாவிளக்கு பூஜை, விநாயகர் பூைஜ, சாஸ்தா, பெருமாள் சுவாமி, பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மனுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 2ம் நாளான இன்று காலை நையாண்டிமேளம், வில்லிசை, மகளிர் முளைப்பாரி எடுத்து வருதல், அலங்கார பூஜை, சிங்காரிமேளம், அம்மன் கும்பம் தரித்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் ஊர் சுற்றி வருதல், நள்ளிரவு உச்சி மாகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நாளை (12ம் தேதி) காலை 5.30 மணிக்கு சுடலைமாடசுவாமிக்கு பொங்கலிடுதல் சிறப்பு பூஜை, 8 மணிக்கு மகாதேவர் வருஷாபிஷேக சிறப்பு பூஜை, பகல் 1 மணிக்கு அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: