மத்திய, தெற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி சற்று வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது என்றார். இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த சூழலால் தமிழகம் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். வறண்ட வானிலையால் தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை இருக்காது என்றார்.

ஆழ்கடல் மீனவர்கள் நாளை மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என கூறிய அவர், மத்திய, தெற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலுக்கு நாளை மறுநாள் முதல் 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: