×

அரையிறுதி போட்டியிலேயே எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. காணாமல் போய்விட்டது: மம்தா பானர்ஜி ட்வீட்

கொல்கத்தா: அரையிறுதி போட்டியிலேயே எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. காணாமல் போய்விட்டதாக மேற்கு வங்காள முதல் மம்தா பானர்ஜி கருத்த தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாவட்டங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்த பாஜக, அங்கும் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முடியாத சூழல் நிலவுகிறது.

சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோல், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது. மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அடுத்தடுத்து பதிவுகளில், மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களின் வெற்றியும்கூட. இது அநீதிக்கு எதிரான ஜனநாயகத்தின் வெற்றி. அட்டூழியங்கள், ஜனநாயக அமைப்புகளை சிதைக்கும் பேரழிவு, அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான வெற்றி. விவசாயிகள், ஏழை மக்கள், இளைஞர்கள், தலித்துகள், எஸ்.சி., எஸ்டி, ஒ.பி.சி, சிறுபான்மையினர் மற்றும் பொது சாதி மக்கள் என யாருக்கும் எந்தவிதமான நல்ல பணிகளையும் செய்யாமல் இருந்தவர்களுக்கு எதிரான வெற்றியாக இதை பார்க்க வேண்டும்.

இந்த அரையிறுதி போட்டியிலேயே எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. காணாமல் போய்விட்டது. இறுதிப்போட்டியான 2019ம் ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி அமையும்? என்பதற்கான உண்மையான ஜனநாயக குறியீடாக இந்த முடிவுகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ஜனநாயகத்தில் மக்கள்தான் எப்போதுமே ஆட்ட நாயகர்கள். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,states ,Missing ,Mamata Banerjee , Mamata Banerjee, 5 State Elections, BJP, Parliamentary Elections
× RELATED அமித்ஷாவா.. சந்தான பாரதியா? மக்களை குழப்பும் பாஜவினரின் போஸ்டர்