விழுப்புரம் அருகே ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு பாதையில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் வழிமறித்தனர். ஆனால் போலீசை கண்ட அவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

போலீசார் உடனடியாக அந்த நபரை பின்தொடர்ந்து துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்பு அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது வண்டியின் பின்புறத்தில் இருந்த 2 சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த வளவனூர் சடராமன் தெருவை சேர்ந்த சிவக்குமார் என தெரியவந்தது.

திருவண்ணாமலை பெரிய கடைவீதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கிக்கொண்டு, வளவனூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக அவர் சாக்கு மூட்டைகளில் கொண்டு சென்றது மேற்கொண்டு விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3௦ ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் அவரது இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: