சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளியை இடிக்க எதிர்ப்பு : பெற்றோர்கள் போராட்டம்

சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக தனியார் பள்ளியை இடிப்பதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 2500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்வதற்காக பள்ளிக்குச் சொந்தமான சுமார் 88 சென்ட் இடத்தை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்த உள்ளது. இதற்காக நிலத்தை அளவெடுக்கும் பணி உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிக்கு சொந்தமான இடத்தை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 500க்கும் மேற்பட்ட

பெற்றோர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பள்ளியை காக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி பள்ளியை சுற்று ஊர்வலமாக சென்று கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: