×

தெலுங்கானாவின் கஜ்வெல் தொகுதியில் டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் அபார வெற்றி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் கஜ்வெல் தொகுதியில் டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகரராவ் சுமார் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது. தெலுங்கானா தேர்தலில் டிஆர்எஸ் பெரும் வெற்றியை பெற தயாராகியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 51,514 வாக்குகள் அதிகம் பெற்று அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் முடிவுகள், மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் என்பதால் பா.ஜ.க, காங்கிரஸ், டிஆர்.எஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பதற்றத்துடன் முடிவை எதிர் நோக்கியிருந்தன.

ஆனால் துவக்கம் முதலே தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி பெரும்பான்மையான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து ஆட்சியை தக்க வைப்பதை உறுதி செய்துள்ளது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 73.20 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), பாஜ ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ் - தெலுங்கு தேசம் - தெலங்கானா ஜன சமிதி - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் தேர்தல் களத்தில் உள்ளன.

இருந்தும் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மீண்டும் தெலுங்கானாவிற்கு சந்திரசேகரராவ் முதல்வராவது உறுதியாகியுள்ளது. தெலுங்கானாவில் கடந்த ஆண்டு தேர்தலை காட்டிலும் இந்த ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அதிக இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இது குறித்து எம்.பி.கவிதா கூறும்போது, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் அளித்துள்ள புகார் தவறானவை என்றும், தோல்வியை காணும் கட்சிகள் இப்படித் தான் சாக்கு சொல்லும் என தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrasekara Rao ,TRS ,constituency ,Khajuwal ,Telangana , Telangana, TRS Party chairman, Chandrasekara rao , wins
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...