×

அதிமுகவு-க்கு பாஜக ஒன்றும் பங்காளியோ, மாமன் மச்சானோ இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவு-க்கு பாஜக  மாமனோ, மச்சானோ, பங்காளியோ கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்லில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்று சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது. பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதை வைத்து எதையும் கணிக்க முடியாது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு எவ்வளவு வலுவான கூட்டணி அமைத்தாலும், வரும் தேர்தல்களில் அதிமுக தான் வெற்றிபெறும். இதற்நு கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே சான்று என்றார். கூட்டணிக்கு சரியான நேரம் தேர்தல் தான், தேர்தல் அறிவித்த பின் தான் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். ரஜினி சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தாராளமாக செய்யட்டும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,UPA ,Minister Jayakumar ,Mamakan , AIADMK, BJP, Minister Jayakumar
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...