குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் 3-வது நாளாக சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் 3 அதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயகாஸ்கரின் உதவியாளர் சரவணனிடமும் விசாரணை செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே 3-வது முறையாக சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, சரவணன் கடந்த 7-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்தது. தொடர்ந்து 8-ம் தேதியும் சரவணனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். மீண்டும் 11-ம் தேதி ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி இருந்தனர். அதன்படி இன்று 3-வது நாளாக சரவணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அப்போது சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் வேறு சிலருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. இதில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: