வடமாநிலங்களிலேயே மலராத தாமரை இங்கு எப்படி மலரும்...? - திருநாவுக்கரசர் கேள்வி

சென்னை: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் அக்கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கட்சி தலைவராக பவியேற்று ராகுல் காந்தி உழைத்த உழைப்பு நன்றாக பலன் தந்துள்ளதாக கூறினார். 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளனர்.

பாரதிய ஜனதாவிற்கு மாற்று காங்கிரஸ் கட்சி தான். மோடிக்கு மாற்று ராகுல் காந்தி தான் என்பது வெளிவரும் தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டார். நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை, தமிழகத்தில் எப்படி மலரும் என வினவினார். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி அலை ஓய்ந்துவிட்டது என கூறிய திருநாவுக்கரசர், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும் என்றார்.

இந்த வெற்றி எதிர்கால ராகுலின் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாகவும் இந்த வெற்றியை மகிழ்ச்சியோடு பார்ப்பதாகவும் கூறியுள்ளார். பாரதிய ஜனதா ஆளுங்கட்சியாக உள்ள இடங்களில் தோல்வியை தழுவியிருப்பது, அக்கட்சியின் கருவறைகளில் கருச்சிதைவு நடைபெற்றுள்ளதை காட்டுவதாக கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: