முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் பணியாற்றிய வங்கதேச இளைஞர்கள் கைது : போலி ஆதார் கார்டுகள் பறிமுதல்

திருப்பூர்: முறையான ஆவணங்களின்றி திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றிய வங்கதேச நாட்டை சேர்ந்த  15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலி ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகேயுள்ள

சிறுபூலுவப்பட்டியில் வங்கதேசத்தை சேர்ந்த ஆட்கள் சிலர், பாஸ்போர்ட் உள்ளிட்ட எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி தங்கி பணிபுரிந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த சபுஷ் மற்றும் அப்துல் ரஷிஷ் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட  ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த  காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிறுபூலுவபட்டி பகுதியில் சுற்றித்திரிந்த 12 பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில் முகமது சலீம் காஜி என்பவர் 2017ம் ஆண்டு கள்ளத்தோனி மூலம் இந்தியாவிற்குள் நுழைந்து, அதன் பின் திருப்பூர் வந்து பனியன் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.

நல்ல வருமானம் கிடைத்ததையடுத்து வங்கதேசத்திலிருந்து கள்ளத் தோனி மூலம் ஆட்களை சட்ட விரோதமாக வரவழைத்து,  உரிமையாளர்களிடம் கமிஷன் பெற்று பனியன் நிறுவனங்களில் ஆட்களைச் சேர்த்துவிட்டதாக சலீம் ஒப்புக்கொணடான். அவன் அளித்த தகவல் படி பஜ்லுல் ஹக், முகமது ரோனி ஷேக், முகமது ரிடாய் ஷேக், முகமது ரசிதுல் ஹக், முகமது லிடான், பஷார்,  முகமது ராபின் ஹுசைன், இப்ராஹிம் காஸி, முகமது மமுன் பிஷ்வாஸ், முகமது அன்வர் ஹுசைன், டெலோவார் ஹுசைன் ஆகிய 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலி ஆதார் கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். அனைவரையும் திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: