அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது

சென்னை: அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். 20 தொகுதி இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதால் அதை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இடைத்தேர்தல் நடைபெற்றால் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து வாக்குச்சாவடி முகவர்களையும் அ.தி.மு.க. தயார் நிலையில் வைத்திருப்பதால் தேர்தல் தேதியை எப்போது அறிவித்தாலும் அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இதில் பேச உள்ளனர். இது தவிர கட்சியின் பொதுக்குழுவை எப்போது கூட்டலாம் என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: