5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மோசமான தோல்வியை அடையவில்லை : தமிழிசை பேட்டி

சென்னை: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில் அனைத்து மாநில தேர்தலிலுமே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்துள்ளது. இது பற்றி தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது, வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்க மாட்டோம், தோல்வியடைந்தால் துவள மாட்டோம் என்றார். மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது. மோடி அலையை ஓய வைக்கவே முடியாது என்றார். மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறிய அவர், 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மோசமான தோல்வியை அடையவில்லை. வெற்றி பெற்ற எதிர்கட்சிகளுக்கும் தோல்வியுற்ற தங்களுக்கும் ஒருசில தொகுதிகளே வித்தியாசம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கடுமையான உழைப்பில் பாஜக வெற்றி பெற்றால் இயந்திரத் தனமாக குற்றம்சாட்டுவர். இதுநாள் வரை பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளது என குறை கூறிய காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இழுபறி இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளதாக கூறிய அவர், பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றி பெறாது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: