×

சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பி.யில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்...... மிசோரத்தில் ஆட்சியமைக்கும் எம்.என்.எப்.

ஜெய்ப்பூர்: தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

சத்தீஸ்கர் 15 ஆண்டுகளுக்கு பின் காங்., ஆட்சி
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 59 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் 15 வருடங்களுக்கு பிறகு சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது.  ரமண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி 15 வருடங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. ஆட்சியமைக்க 46 இடங்களே தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 59 இடங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்
பாஜ கட்சி ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. 199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜக 81 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க 100 இடங்களே தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 114 இடங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ம.பி.யில் காங்கிரஸ் முன்னிலை
மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 112 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஆட்சியை தக்கவைத்தது டிஆர்எஸ்
தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. 85 இடங்களில் முன்னிலை வகிப்பதால் அங்கு மீண்டும் டிஆர்எஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இருப்பினும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மிசோரத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான மிசோரம். அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் எம்.என்.எப். கட்சி 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 34 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இம்முறை 9 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chhattisgarh ,Rajasthan ,Madhya Pradesh ,Mrs ,Congress , assembly election, vote count, 5 state assembly elections, Congress, TRS, BJP, MNF
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...