×

சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு ஆட்களை அழைத்து சென்ற இந்தியர் அதிரடி கைது

வாஷிங்டன்: சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு ஆட்களை அழைத்துச் சென்ற இந்தியர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் குடியேறுவதற்கான சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அந்நாட்டில் குடியேறுவதையே ஏராளமானோர் வாழ்வின் லட்சியமாக கொண்டுள்ளனர். இதற்கு இந்தியா உட்பட பிற நாட்டு மக்களும் விதிவிலக்கல்ல. இந்த காரணங்களால் மக்களின் ஆசையை பயன்படுத்தி ஏராளமான பணம் வசூலித்து அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக ஆட்களை அழைத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு அழைத்துச் செல்வது அமெரிக்காவில் குற்றம் என்பதால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு,  கைது நடவடிக்கைகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று.

இந்தியாவை சேர்ந்த பவின் படேல் என்ற 38 வயதுடைய இளைஞர் இவ்வாறு கடல் மற்றும் வான் வழியாக ஆட்களை சட்ட விரோதமாக அமெரிக்க நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர் மீது சந்தேகம் கொண்ட அமெரிக்க குடிபுகும் துறை அதிகாரிகள் இவரை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். சமீபத்தில் இவரை அமெரிக்க விமான நிலையத்தில் வைத்து பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தாம் இவ்வாறு சட்ட விரோதமாக ஆறு முறை ஆட்களை அழைத்துச் சென்றதாக பவின் படேல் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 10,000 அமெரிக்க டாலர் வரை பெற்றதாக பவின் படேல் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தியர்களை மட்டுமின்றி தாய்லாந்து மக்களையும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு அழைத்து வந்ததையும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பவின் படேலை விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்த உள்ளனர். பவின் படேல் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,men ,US , Illegal, US, arrested
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...