×

தெலங்கானாவில் ஆட்சியை தக்கவைத்தது டிஆர்எஸ்...... சந்திரசேகர ராவ் பின்னடைவு

5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி 83 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் முடிவுகள், மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் என்பதால் பா.ஜ, காங்கிரஸ், டிஆர்.எஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பதற்றத்துடன் முடிவை எதிர் நோக்கியுள்ளன.

சந்திரசேகர ராவ் பின்னடைவு
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவ் பின்னடைவில் உள்ளார். கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். இருப்பினும் தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி  83 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான்: காங்கிரஸ் முன்னிலை
ராஜஸ்தானில் தற்போதைய நிலவரப்படி அங்கு காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 68 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போது ராஜஸ்தானில் வசுந்தர ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சட்டீஸ்கர்: காங்கிரஸ் முன்னிலை
சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின.  தற்போதைய நிலவரப்படி பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 55 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த 2013ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இங்கு பா.ஜ 21 இடங்களையும், காங்கிரஸ் 39 இடங்களையும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

மத்தியப் பிரதேசம்: காங்கிரஸ் முன்னிலை
மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மிசோரம்: எம்என்எப் முன்னிலை
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான மிசோரமில், 40 தொகுதிகளில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 9 இடத்திலும், எம்என்எப் 25 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.  

தெலங்கானா: டிஆர்எஸ் முன்னிலை
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 73.20 சதவீத வாக்குகள் பதிவாகின.  தற்போதைய நிலவரப்படி ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) 83 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), பாஜ ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ் - தெலுங்கு தேசம் - தெலங்கானா ஜன சமிதி - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் தேர்தல் களத்தில் உள்ளன. இருந்தும் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TRS ,Telangana ,Chandrasekaro Rao , TRS Party, Telangana, Legislative Election,Chandrasekara Rao
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...