×

தேர்தல் முடிவில் திக்.. திக்..திக்.. பாதாளத்தில் சரிந்த பங்குச்சந்தை

மும்பை: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளிவர உள்ள நிலையில், இந்த பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளையும் நேற்று தொற்றிக் கொண்டது. இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 713.53 புள்ளிகள் சரிந்து 34,959.72  புள்ளிகளாக இருந்தது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 205.25 புள்ளிகள் சரிந்து 10,488.45 புள்ளிகளாக இருந்தது. ராஜஸ்தான், தெலங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஷ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்டன.

இதில், ராஜஸ்தானில் காங்கிரசும், தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. ம.பி., மிசோரம், ராஜஸ்தானில் இழுபறி நீடிக்கும் என கணிப்புகள் வெளியாகின.  இது வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தைகளில் கடுமையாக எதிரொலித்தது. வர்த்தக தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன்தான் காணப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் நேற்று 50 காசு சரிந்து 71.32 ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியதால் இன்றும் பங்குச்சந்தை வீழ்ச்சி தொடரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Dik , Stock market, broken
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...