×

பெரிய விவசாயிகளுக்கு பல கோடி வழங்கி விட்டு சிறு விவசாயிகளை புறக்கணிக்கும் வங்கிகள்

புதுடெல்லி: சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் ஒதுக்கீட்டு உச்சவரம்பில் பாதி கூட கிடைப்பதில்லை என்பது ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. விவசாயிகளுக்கு வங்கிகள் கடனுதவி அளித்து வருகின்றன. இதற்கான உச்சவரம்பு தொகையையும் தொகையையும் மத்திய அரசு ஆண்டுதோறும் உயர்த்தி வருகிறது. ரிசர்வ் வங்கியின் 2016-17 நிதியாண்டுக்கான விவசாய கடன் தொடர்பான புள்ளி விவரத்தின்படி 2 லட்சத்துக்கு கீழ் கடன் கேட்டு சிறு விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கிடைத்த கடன் மொத்த பயிர், வேளாண் கடன் தொகையில் 10.78 லட்சம் கோடியில் 40 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால், பெரிய விவசாயிகள் அதாவது, 2 லட்சத்துக்கு மேல் 1 கோடிக்குள் கடன் பெற்றவர்கள் 47 சதவீதம் பேர். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள் 13 சதவீதம் பேர். இதில் 100 கோடிக்கு மேல் 210 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய மானியக்கடன்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படம் 2 லட்சத்துக்கு கீழ் உள்ள கடன் உதவி வழங்குவது 10 ஆண்டுக்கு முன்பு மொத்த வேளாண் கடனில் 45 சதவீதமாக இருந்தது. தற்போது இது 40 சதவீதமாக குறைந்து விட்டது.

இதற்கு காரணம், வங்கிகள் சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு இடையே வேறுபாடு காட்டுவதுதான் என கூறப்படுகிறது. அரசு திடீரென விவசாய கடன்களை ரத்து செய்து விடுகின்றன. இதன் காரணமாகவே சிறு விவசாயிகளுக்கு கடன் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், சில அதிகாரிகளோ ரிஸ்க் இருப்பதாக கூறுகின்றனர். சர்வதேச அளவில் வேளாண் கடன்கள் அந்தந்த பயிர்களுக்கு கிடைக்கும் விலையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதோடு, விலை அதிகம் கிடைக்காத அல்லது ரிஸ்க் அதிகம் உள்ள விவசாய தொழில்களுக்கு கடன் வட்டி அதிகம். இதுபோன்ற நடைமுறை இந்தியாவில் சாத்தியமில்லை. இதுபோன்ற காரணங்களாலும் சில வங்கிகள் சிறு விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன என கூறப்படுகிறது.

முன்னுரிமை கடன்களில் விவசாயத்துக்கு 18 சதவீதம் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இதில் இத்துறைக்கான மறைமுக கடன் உச்சவரம்பு 4.5 சதவீதம். இவை விவசாயத்துக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள், கதிரடிக்கும் கருவி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், முறைகேடாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய கடன்கள் இவற்றுக்கு கிடைக்கின்றன. ஆனால் முன்னுரிமை கடன்களில் சிறு விவசாயிகளுக்கு 8 சதவீத அளவு கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Banks , Banks , away big crops , big farmers , neglect small farmers
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்