மூத்த குடிமக்களின் வங்கி டெபாசிட்களுக்கு 50,000 வரை வட்டி வருவாய்க்கு டிடிஎஸ் பிடித்தம் கிடையாது

மூத்த குடிமகன்கள் பலர் தங்களிடம் உள்ள பெரிய தொகையை வங்கி திட்டங்களில் டெபாசிட் செய்கின்றனர். இவற்றுக்கு வருமான வரிச்சலுகை உண்டு. இவர்களுக்கு வட்டி வருவாயில் ஆண்டுக்கு 50,000 வரை டிடிஎஸ் பிடித்தம் செய்ய தேவையில்லை. ஆனால், சில வங்கிகள் 50,000க்குள் கிடைக்கும் வட்டி பலன்களுக்கும் டிடிஎஸ் பிடித்தம்  தகவல்கள் வந்துள்ளன. இதை தொடர்ந்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த வரி பிடித்தம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், மூத்த குடிமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்திற்கு வரும் வட்டி வருவாய்க்கு வருமான வரி சட்டம் 194-ஏ பிரிவின்கீழ், வங்கிகள் வரி (டிடிஎஸ்) பிடித்தம் செய்கின்றன. மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு ஆண்டிற்கு ரூ.50,000க்கு குறைவாக வட்டி வருவாய் இருந்தால் அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டியது இல்லை.

அதற்கு மேல் இருந்தால்தான் வரி பிடித்தம் செய்ய வேண்டும். ஆனால், வங்கிகள் தவறுதலாக, ரூ.50,000க்கும் குறைவாக வட்டி வருவாய் இருந்தாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்வதாக தெரிகிறது. வருமான வரி சட்டம் பிரிவு 80-டிடிபி கடந்த ஏப்ரல் 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 60 வயது மற்றும் அதற்கு மேல் வயதான மூத்த குடிமக்கள் தாங்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு கிடைக்கும் வட்டி வருவாயில் 50,000 வரையில் வரி விலக்கு பெறலாம். ஒன்றுக்கு மேற்பட்டடெபாசிட்கள் இருந்தாலும் வட்டி வருவாய் 50,000க்கு குறைவாக இருந்தால் அதற்கு வரி பிடித்தம் செய்ய வேண்டியது இல்லை என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: