×

ரூ.90 லட்சம் பணத்தை கொடுக்காததால் பவர் ஸ்டார் மனைவியை சிறை வைத்து ஊட்டி பங்களாவை எழுதி கேட்டு மிரட்டல்: பெங்களூரு தொழிலதிபர் உட்பட 7 பேர் கைது

சென்னை:  சென்னை அண்ணாநகர் 7வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகரான இவர் மீது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த புதன்கிழமை பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி, கணவன் திடீரென மாயமாகிவிட்டதாகவும், அவரை மீட்டு தர கோரியும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பவர் ஸ்டார் சீனிவாசன் செல்போன் எண்ைண ைவத்து விசாரித்தனர். அப்போது அவர் உதகையில் இருப்பதாக டவர் காட்டியது. பவர் ஸ்டார் சீனிவாசனை தொடர்பு கொண்டபோது,  நான் சொத்து பிரச்னை காரணமாக உதகைக்கு வந்துள்ளேன். மறுநாள் ெசன்னை வருவதாக தெரிவித்தார். இதையடுத்து கணவரை பார்க்க ஜூலி உதகைக்கு சென்றுள்ளார். பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசன் மட்டும் சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினார். அவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆஜராகி உரிய விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

இதற்கிடையே உதகைக்கு சென்ற மனைவி ஜூலியை 11க்கும் மேற்பட்ட குண்டர்கள் சொத்தை அபகரிக்க ஒரு வீட்டில் சிறை வைத்துள்ளதாக பவர் ஸ்டார் சீனிவாசன் சனிக்கிழமை இரவே கோயம்பேடு  போலீசில் புகார் ஒன்று அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பவர் ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு தொழிலதிபர் ஆலம் என்பவருக்கு வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் முன்பணம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி பணம் வாங்கி கொடுக்க வில்லை. இதற்கிடையே பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமாக ஊட்டியில் பங்களா வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை வாங்கிய பணத்திற்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஆலம், பவர் ஸ்டார் சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஊட்டியில் உள்ள சொத்தை எழுதி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், சொன்னபடி சொத்தை எழுதி கொடுக்கவில்லை. இதனால், தொழிலதிபர் ஆலம், பவர் ஸ்டார் சீனிவாசனை பெண் ஒருவர் மூலம் தொடர்பு கொண்டு எங்கள் நிறுவனம் மூலம் திரைப்படம் தயாரிக்க இருக்கிறோம். அதில் நகைச்சுவை நடிகராக நீங்கள் நடிக்க நாங்கள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் பணத் தருகிறோம் என்று கூறியுள்ளார். அதை கேட்டு, பவர் ஸ்டார் சீனிவசான் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிறகு அந்த பெண் கூறியபடி கடந்த 5ம் தேதி பவர் ஸ்டார் சீனிவாசன் கோயம்பேட்டில்  உள்ள ஓட்டலில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தான் ெபங்களூரு தொழிலதிபர்  ஆலம்  ரூ.90 லட்சம் பணத்திற்கு திட்டமிட்டு நாடகமாடி தனது ஆட்களை வைத்து தன்னை பிடித்தது பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு தெரியவந்தது. உடனே பெங்களூரு ரவுடிகள் உதவியுடன் தொழிலதிபர் ஊட்டியில் உள்ள சொத்தை எழுதிக்கேட்டு கத்தி முனையில் மிரட்டல் விடுத்துள்ளனர். வேறு வழியின்றி பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் உள்ள சொத்தை எழுதி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதன்படி அந்த கும்பல் இரவோடு இரவாக ஊட்டிக்கு கடத்தி சென்றனர்.  கடந்த 6ம் தேதி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பவர் ஸ்டார் சீனிவாசனை அழைத்து ெசன்றுள்ளனர். பிறகு சொத்திற்கான நகலை எடுத்து பார்த்த போது சொத்து மனைவி ஜூலி பெயரில் இருந்தது தெரியவந்தது. உடனே பெங்களூரு ரவுடிகள் பவர் ஸ்டார் சீனிவாசன் செல்போனில் அவரது மனைவிக்கு போன் செய்து ஊட்டிக்கு வரும்படி  அழைத்துள்ளனர். வெளியில் சொன்னால் உன் கணவரை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

அதன்படி ஜூலி ஊட்டி வருவதற்கான விமான டிக்கெட்டும் அந்த கும்பலே எடுத்து கொடுத்துள்ளனர். பின்னர் கோவை வந்த ஜூலியை கார் மூலம் ஊட்டிக்கு அழைத்து ெசன்று மிரட்டியுள்ளனர். இதற்கிடையே சொத்துக்கான பத்திரம் ெசன்னை வீட்டில் இருந்துள்ளது. உடனே ரவுடி கும்பல் சொத்து பத்திரத்தை எடுத்து வரும்படி பவர் ஸ்டார் சீனிவாசனிடம் கூறினர். அதுவரை, உன் மனைவி எங்களிடம் பிணை கைதியாக இருப்பார் என்று கூறி அனுப்பி உள்ளனர். அதன்பிறகுதான் பவர் ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு கும்பலிடம் இருந்து தப்பி சென்னைக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த தகவலின்படி கோயம்பேடு போலீசார் பெங்களூரு தொழிலதிபர் ஆலம் உட்பட 7  பேர் மீது ஐபிசி 147, 367, 365 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கோயம்
ேபடு போலீசார்  ஊட்டி போலீசார் உதவியுடன் ஜூலியை சிறை வைத்திருந்த இடத்தை  ேநற்று முன்தினம் இரவோடு இரவாக சுற்றி வளைத்து பெங்களூரு தொழிலதிபர் ஆலம், அவரது தோழி ப்ரீத்தி, செல்வின் உட்பட 7  பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி ஜூலியையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட தொழிலதிபர் உட்பட 7 பேரையும் தனிப்படையினர் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,businessman ,Bangalore , Power Star Wife, jail, Ooty, Bangalore businessman, arrested
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது