×

லிபியாவில் 2 மாதங்களுக்கு முன் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் 6 பேர் ஐஎஸ் தீவிரவாதிகளால் படுகொலை

திரிப்போலி: லிபியா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் கடத்திச்சென்று பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிபியா நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா பகுதி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஐஎஸ் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டு அப்பகுதியை ராணுவம் கைப்பற்றியது. அதற்குப்பின் அந்த பகுதியில் ஐஎஸ் அமைப்பினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தின் புகா எனும் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 5 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் தாக்குதலுக்குப் பிறகு 10 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர். இந்நிலையில் தற்போது கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஐஎஸ் அமைப்பிடம் உள்ள பணயக் கைதிகள் மற்றும் ராணுவத்திடம் உள்ள பயங்கரவாதிகளை தங்களுக்குள் பரிமாற்றம் செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hostages ,Libyan ,terrorists , Libya,hostages,abducted,Assassination,IS terrorists
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...