×

சென்னை மெட்ரோ ரயில் சேவையை வண்டலூர் வரை நீட்டிக்க முடிவு : முதற்கட்ட பணிகள் தீவிரம்!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையை தாம்பரம் வழியாக ஊரப்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் திருவொற்றியூர் முதல் விமான நிலையம், சென்ரல் முதல் பரங்கிமலை வரை கோயம்பேடு வழியாகவும் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வழியான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு  சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 கி.மீ தூரம் கொண்ட இந்த மெட்ரோ ரயில் பாதை முழுக்க சுரங்க பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடமானது இம்மாத இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக மெட் ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஊரப்பாக்கம், கிளாம்பாக்கத்திற்கு தாம்பரம் வழியே மெட்ரோ ரயில் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. வண்டலூரை தாண்டியதும் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சிஎம்டிஏக்கு சொந்தமான 88 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென சுமார் ரூ. 304 கோடி ஒதுக்கி முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவை வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரயில் பாதையை எந்த பாதையில் அமைப்பது, எத்தனை ரயில் நிலையங்கள், எவ்வளவு நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையின் அடிக்கப்படையில் மாநில அரசு, மத்திய அரசுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்காக கூடுதலாக 10 ரயில்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Metro ,Vadlamoor , Chennai Metro Railway, Vandalur, Uroapakkam Bus Stand
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...