×

அதிபர் டிரம்ப் உடனான கருத்து வேறுபாட்டால் வெள்ளை மாளிகை நிர்வாக தலைவர் ஜான் கெல்லி பதவி விலகல்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் நிர்வாக தலைவராக இருக்கும் ஜான் கெல்லி, அதிபர் டிரம்ப் உடனான கருத்து வேறுபாட்டால் பதவி விலகுவதாக வெளியான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படை அதிகாரியான ஜான் கெல்லி-அதிபர் டிரம்ப் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் அவர் பதவி விலகுவதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரது பதவி விலகலை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் அவர் பதவி விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஜான் கெல்லி தன்னுடன் இருந்துள்ளார் எனவும் அவர் ஒரு மகத்தான பணியாளர் எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் நிர்வாக தலைவர் பதவிக்கு வரப்போவது யார் என்பது குறித்து அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : John Kelly ,White House ,Chancellor , White House,Executive Chairman,John Kelly,Resignation,President Trump
× RELATED எஸ்ஆர்எம் கல்லூரியில் கருத்தரங்கம்;...