கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.900 வரை அதிகரிப்பு

சென்னை: கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.900 வரை அதிகரித்து காணப்படுகிறது.  இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த மாதம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது, கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ₹23,240க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி 1 கிராம் ஆபரண தங்கம் ரூ.2, 900 விற்ற நிலையில், இன்று ரூ.3,012 விற்கப்படுகிறது.

10 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.112-ம் , சவரனுக்கு ரூ.896-ம் அதிகரித்துள்ளது. ஆபரண தங்கம் 1 சவரன் இன்று ரூ.24,096க்கு விற்பனையாகிறது.

அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் ஏதும் காணப்படவில்லை. கடந்த 1ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.38, 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.40,30 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. கடந்த 10 நாட்கள் தங்கத்தின் விலை உயர்வதற்கு தங்கம் உற்பத்தி குறைந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையே, தங்கம் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி. அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் வரும் நாட்களில் சவரனுக்கு ₹200 வரை விலை உயரத்தான் அதிகமான வாய்ப்புள்ளது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: