×

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..மக்கள் அவதி

கரோலினா: அமெரிக்க நாட்டின் தென்கிழக்கில் உள்ள வடக்குக் கரோலினா, தெற்குக் கரோலினா, ஜியார்ஜியா, அலபாமா, டென்னசி, கென்டக்கி, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் அங்கு பனிப்புயலும் வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. பனிப்புயல் இன்னும் வலுவடைய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடுமையான பனிப்புயலின் காரணமாக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

வட கரோலினாவில் உள்ள சில நகரங்களின் சாலைகளில் 14 அங்குல அளவிற்கும் அதிகமான உயரத்துக்குப் பனி உறைந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அடுத்த சில நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு நிலவும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடும் பனிப்பொழிவு காரணமாக வட கரோலினா மற்றும் விர்ஜினியாவின் ஆளுநர்கள் அங்கு அவசரநிலையை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : states ,United States , southeastern state,United States,heavy snowfall,normal lives,affected
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்