இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு : 600 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்தது சென்செக்ஸ்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் இன்று கடும் சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 190 புள்ளிகளும், மும்பை  பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 605 புள்ளிகளும் சரிந்தன. வணிக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 35,601 புள்ளிகளாகவும் நிஃப்டி 10, 503 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகிந்தரா அண்ட் மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்த முதல் ஐந்து நிறுவனங்கள் ஆகும். மும்பை பங்கு சந்தையில் ஐடி, ஆட்டோமொபைல், நிதி, எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம், மின்சாரம், ஆற்றல், கட்டுமானம் என அனைத்துத் துறைகளும் சரிவுடனே சந்தையினைத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி அடைந்தது. வெள்ளிக்கிழமையன்று ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் 80 காசுகளாக இருந்தது. இன்று ரூபாயின் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.71.41 காசுகளாக உள்ளது. நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்தது இதுவே முதல்முறையாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: