கூகுள் மேப் பார்ட்டியா நீங்க? உஷார் மே தேக்கோ!

முன்பெல்லாம் எல்லாருடைய டெலிபோன் நம்பர்களையும் மனப்பாடமாக வைத்திருப்பேன். செல்போன் வந்தபிறகு ஒருவரின் நம்பரும் நினைவில் இல்லை’ ஏறக்குறைய நம் எல்லோரின் புலம்பல்தான் இது. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள், ஒருவரை சந்திக்க வேண்டிய நேரக்குறிப்பு, நாளை செய்ய வேண்டிய வேலைகள், இன்றைய நாளின் வெப்பநிலை, இவ்வளவு ஏன் எவ்வளவு கலோரி இழந்திருக்கிறோம்...

Advertising
Advertising

இப்படி எல்லா தகவல்களையும் கைவிரல் நுனியில் தகவல்கள்... கிட்டத்தட்ட மனிதனின் இரண்டாவது மூளையாகவே மாறிவிட்டது ஸ்மார்ட் போன். இப்படி, நம்முடைய சிந்திக்கும் திறன், நினைவுத்திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் வேளையில்,  கூடுதலாக, GPS ஊடுருவல் மூலம், செல்லும் இடத்துக்கான வழித்தடத்தை அறிய கூகுள் மேப்பை இயக்கும்போது இயற்கையாக மனிதனிடம் உள்ள ஊடுருவல் திறனுக்கான மூளை பாகங்கள் ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகிவிடுகிறது என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

“குறிப்பிட்ட இடம் செல்ல வேண்டுமானால், அந்த இடம் செல்வதற்கான திசைகளை அறியக்கூடிய ஊடுருவல் திறன் மனிதனிடம் இயற்கையாகவே இருக்கிறது. தகவல்களை சேமிக்கவும், அதை மீண்டும் நினைவுபடுத்தும் செயல்களை மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ்(Hippocampus) என்ற செல்கள்தான் செய்கின்றன. ஏற்கனவே சென்ற இடத்தின் வழித்தடங்களை நினைவுபடுத்தும் வேலையையும் செய்பவை இவை. இதை மனித மூளை கட்டமைப்பின் அதிசயம் என்றே சொல்லலாம்.

ஆனால், ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் மேப் காண்பிக்கும் வழித்தடங்களை பின்பற்றும்போது, மனித மூளையில் உள்ள ஊடுருவல் திறனுக்கான செல்கள் செயலிழந்து விடுகிறது” என்கிறார் அமெரிக்காவின் கென்ட் பல்கலைக்கழக நரம்பியல் அறிவியலாளரான அமிர்ஹோமயூன் ஜாவடி. நம் செயல்திறனை மழுங்கடிக்கும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் அளவு செல்வது அவசியமா என்பதை சிந்திக்க வேண்டிய நேரம்தான் இது.

- இந்துமதி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: