×

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு... பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.92 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.41-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதனை அடுத்து இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 26 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.92 காசுகளாக உள்ளது. மேலும் டீசல் நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.68.41 காசுகளாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Petrol, diesel ,prices fall , public happiness
× RELATED 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு...