சென்னை விமான நிலையத்தில் ரூ50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை 8.30 மணிக்கு எமரேட்ஸ்  ஏர் லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் சமது (50) சுற்றுலா பயணி விசாவில் துபாய் சென்றுவிட்டு சென்னை வந்தார். அவரது உடமையை சோதனையிட்டபோது அவரது சூட்கேசில் மறைத்து வைத்திருந்த 4 தங்க கட்டிகளை கைப்பற்றினர். இதன் மொத்த எடை 600 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ரூ.18.5 லட்சம் ஆகும். எனவே அதிகாரிகள் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நேற்று காலை 8.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பூமிநாதன் (21), சாகுல் அமீது (26), முஜிபுர் ரகுமான் (24), கலந்தர் அப்பாஸ் (30) ஆகிய 4 பேர் ஒரே குழுவாக சுற்றுலா விசாவில் இலங்கை சென்று சென்னை திரும்பினர். இவர்கள் தங்களிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என கூறி கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர்.  அதிகாரிகள் அவர்களது உடமைகளை சோதனையிட்டபோது ஒன்றும் சிக்கவில்லை.

இதையடுத்து 4 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அப்போது அவர்களது ஆசன வாய்க்குள் ஏதோ கருப்பு கலர் பொட்டலத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டனர். உடனே விமான நிலைய மருத்துவ குழுவினரை அழைத்து வந்து ஆசன வாயில் இருந்த சிறிய பொட்டலங்களை எடுத்து பார்த்தபோது 4 பேரிடம் 8 தங்க கட்டிகள் இருந்தது. எனவே அதை பறிமுதல் செய்தனர்.  இதன் மொத்த எடை ஒரு கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ31.5 லட்சம். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முசரவாக்கத்தில் காஞ்சி தாலுகா போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். மேலும், விசாரித்தபோது சென்னையை சேர்ந்த ஆனந்தன் (20), சந்தீப் (17), என்பதும், பைக்கின் பதிவு எண்ணை மாற்றி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்த 10 விலை உயர்ந்த செல்போன்கள், கத்தி மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.  

* மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த வாலிபரை  மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் பெரியார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், பைக்கை திருடி வந்ததும் தெரியவந்தது.

எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: