×

383 கோடி முதலீட்டை விலக்கிய முதலீட்டாளர்கள்

மும்பை: கடந்த வாரம் 5 நாள் வர்த்தகத்தில் ₹400 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுமார் ₹60,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை விலக்கிக் கொண்டனர். இந்த தொடர் வெளியேற்றம் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. பங்குச்சந்தைகளில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.  ஆனால், நவம்பரில் கச்சா எண்ணெய் விலை அபரிமிதமாக குறையத்தொடங்கியது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் நவம்பரில் மட்டும் ₹12,260 கோடி  வெளிநாட்டு முதலீடு குவிந்தது. கடந்த ஜனவரிக்கு பிறகு இதுவே அதிகபட்ச முதலீடாக கருதப்பட்டது.

 இந்நிலையில், வாவே அதிகாரி கைது, சர்வதேச சந்தையில் தள்ளாட்டம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தையில் செய்த முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டனர். இதன்படி கடந்த 3ம்  தேதியில் இருந்து 7ம் தேதி வரை 5 நாட்களில் ₹383 கோடி வெளியேறியுள்ளது. இதில் வாவே அதிகாரி கைதான 6ம் தேதி மட்டும் ₹361 கோடி வெளியேறியுள்ளது. அதேநேரத்தில், கடன் சந்தையில் ₹2,744 கோடி முதலீடு  செய்யப்பட்டுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Investors , 383 crore, investment,
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு