×

முதலீடு செய்ய யோசிங்க போகாத ஊருக்கு வழி வேண்டாம்: அலர்ட் ஆறுமுகம்

ரிடையர் ஆகும் நிலையில் கையில் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கும் பலருக்கு சட்டென நினைவுக்கு வருவது வங்கி, போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்தான். எதற்கும் பக்கத்தில் உள்ள வங்கி  அல்லது நிதி நிறுவனத்துக்கு சென்றால் தெரிந்து விடுமே என போய் உட்கார்ந்து அங்கிருக்கும் அதிகாரி அல்லது ஊழியரிடம் ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலும் வயதுக்கு ஏற்ற நல்ல திட்டங்களைத்தான் வங்கிகள், நிதி  நிறுவனங்கள் கூறும். ஆனால், ஒரு சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் வேறு விதமாக திசை திருப்ப வாய்ப்புகள் உண்டு என்கின்றனர் இதில் அனுபவம் பெற்றவர்கள். முதியோருக்கு என்றே நல்ல திட்டங்கள் இருக்கின்றன. மற்றவர்களை விட வட்டி  அதிகம் கிடைக்கும். ஆனால் பிச்சட் டெபாசிட்டை விட பங்குச்சந்தையுடன் இணைந்த திட்டங்களில் நல்ல லாபம் வரும் என்பார்கள். உண்மைதான். அதேநேரத்தில் அதில் உள்ள ரிஸ்க்கை சில நிதி நிறுவனங்கள், வங்கிகள்  மறைக்கலாம்.

 மூத்த குடிமக்களுக்கு என பிரத்யேக சேமிப்பு திட்டம் உள்ளது. இதில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். ஒருவராகவோ இணைந்தோ 15 லட்சம் ரூபாய் வரை போடலாம். அதேநேரத்தில் ரிடையர்டு  ஆனபோது கிடைத்த பணத்துக்கு மேல் போகக்கூடாது. விஆர்எஸ் வாங்கியிருந்தால் 55 வயது முதல் 60 வயது வரை இந்த திட்டத்தில் பணம் போடலாம். பொதுத்துறை வங்கி மட்டுமல்ல, தனியார் வங்கிகளிலும் இந்த திட்டம்  உண்டு. டெர்ம் இன்சூரன்ஸ் உள்ளன. ஆனால், சில வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் யுலிப் திட்டங்களில் பணம் போட நிர்பந்திக்கலாம். ஏறக்குறைய இது மியூச்சுவல் பண்ட் போன்றதுதான். இதில் உள்ள ரிஸ்க் உணர்ந்து முடிவு  எடுக்கவும். அதுபோல் தங்க பத்திரங்களும் ஏற்ற முதலீடுதான். ஆனால், தங்க பதிலாக திட்டத்துக்கு பதிலாக தங்க கட்டிகளை வாங்க யோசனை கூறினால் சற்று உஷாராக இருக்க வேண்டும்.  வங்கி அதிகாரிகள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்து விடாதீர்கள். யோசனை உங்களுக்கு ஏற்றதா? கையில் இருக்கும் பணம் நீண்டகாலத்துக்கா  அல்லது மகன், மகள் திருமண செலவுக்கு, படிப்பு செலவுக்கு குறுகிய காலத்துக்குள் ஏற்க வேண்டியதா என்றெல்லாம் யோசித்து முடிவு செய்யவும்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alert Arumugam , Think, investing, get out , town, Alert Arumugam
× RELATED 2 ஆண்டுக்கு எடுத்த காப்பீட்டில்...