×

அரசு துறைகளுக்கு கொள்முதல் செய்வதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு முன்னுரிமை

புதுடெல்லி: அரசு துறைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் வாகனங்கள் 65 சதவீதம் உள்நாட்டு பாகங்கள் கொண்டதாக இருப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் பல இணைந்து உற்பத்தியை மேற்ெகாண்டு வருகின்றன. இந்த திட்டத்தை ஊக்குவிக்கும்  மற்றொரு முயற்சியாக, அரசு துறைகளுக்கு வாங்கப்படும் வாகனங்களுக்கும் மத்திய அரசு கட்டாய விதிகளை வகுத்துள்ளது. இதுகுறித்து கனரக வாகன அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு துறைகளுக்கு வாங்கப்படும்  வாகனங்கள்,  65 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பை கொண்டதாக இருப்பது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயுவில் இயங்கும் பயணிகள் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள், டூவீலர்கள், 3 சக்கர  வாகனங்கள் என அனைத்துக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

 இந்த புதிய விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்து விட்டன. இந்த விதிகளில் மாற்றம் செய்வது குறித்து அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு சீராய்வு செய்யப்படும். அதன்பிறகு புதிய அறிவிப்பு வெளியிடப்படும்.அரசு வாகன கொள்முதல் ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் மேற்கண்ட விதிகளை வாகனங்கள் பூர்த்தி செய்துள்ளதா என்ற விளக்கத்துடன் சுய சான்று சமர்ப்பிக்க வேண்டும். இதுபோல், உதிரி பாகங்கள் உள்ளூரில் தயாரித்து  சப்ளை செய்யப்படுகிறதா என்பதற்கான விவரத்தையும் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,government departments , purchase , government departments, Prepared, Vehicles , priority
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...