போதையில் கீழே விழுவதுபோல் நடித்து டாஸ்மாக் ஊழியரை வெட்டி 16 லட்சம் நூதன கொள்ளை: 4 பேருக்கு போலீஸ் வலை

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே போதையில் விழுவதைப்போல் நடித்து டாஸ்மாக்  சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ₹16.60 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி அடுத்த தோப்புவயல் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை  உள்ளது. இந்த கடையில் தினசரி பல லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள்  விற்பனையாகும். இக்கடையில் சூப்பர்வைசராக  கண்ணன்(35) உள்ளார்.  கண்ணனின் சகோதரர்  செந்தில்குமார் மற்றும் காளிதாஸ்  ஆகியோர் ேசல்ஸ்மேன்களாக உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கடையை  மூடிவிட்டு, 2 நாட்கள் வசூலான  ₹18,87,300ஐ ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு  கண்ணன், செந்தில்குமார் ஒரு பைக்கிலும், காளிதாஸ் மற்றொரு பைக்கிலும்  கிளம்பினர்.

கடையை விட்டு சிறிது தூரம் சென்றபோது, எதிரே 35 வயது  மதிக்கத்தக்க 4 பேர் வந்தனர். இதில் 4 பேரில் ஒருவன் போதையில் தடுமாறி  கீழே விழுவதுபோல் நடித்து கீழே விழுந்தான். இதைப்பார்த்த கண்ணன் உள்ளிட்ட 3   பேரும் தங்களது டூவீலர்களை நிறுத்திவிட்டு கீழே விழுந்தவனை  தூக்கச்சென்றனர். அப்போது  மற்ற 3 பேர்  கண்ணனிடம் பணம் இருந்த  பணப்பையை பறிக்க முயன்றனர். இதை பார்த்த கண்ணன் அவர்களிடமிருந்து தப்பி   கடையை நோக்கி ஓடினார். கண்ணனை 4 ேபரும் துரத்தினர். அவர்களில்  ஒருவன் அரிவாளால்  கண்ணனின் காலில் வெட்டினான். இதில் நிலை தடுமாறி கண்ணன்  கீழே விழுந்தார்.

கண்ணன் வைத்திருந்த பையிலிருந்து ₹2,27,150   கீழே விழுந்தது. 4 பேரும் பையில் இருந்த மீதிப்பணமான ₹16,60,150ஐ  பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். பின்னால் தொடர்ந்து ஓடி வந்த  செந்தில்குமார், காளிதாஸ்  இருவரும் சிதறி கிடந்த பணத்தை எடுத்துக்கொண்டு  கீழே விழுந்து கிடந்த கண்ணனை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். பின்னர் மணமேல்குடி போலீசில் புகார்  செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பேரையும் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: