×

கடைசி போட்டியில் சதமடித்து கம்பீர் அசத்தல்

புதுடெல்லி : கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அனுபவ வீரர் கவுதம் கம்பீர், தனது கடைசி போட்டியில் சதம் விளாசி அசத்தினார். டெல்லி - ஆந்திரா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டம், பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீச, ஆந்திரா முதல் இன்னிங்சில் 390 ரன் குவித்து ஆல் அவுட்டானது (121 ஓவர்). ரிக்கி புயி 187 ரன் விளாசினார்.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்திருந்தது. கம்பீர் 92 ரன், ஷோரி 39 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். தனது கடைசி போட்டியில் சதத்தை நிறைவு செய்து அசத்திய கம்பீர்   (37 வயது), 112 ரன் (185 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். அவருக்கு அனைத்து வீரர்களும் ரசிகர்களும் கை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். டெல்லி அணி 3ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் என்பதால், இப்போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kambir ,match , Kambir wasted , last match
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...