×

ஆஸி. மண்ணில் 1000 ரன்! கோஹ்லி அபார சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன் குவித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமை இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. அடிலெய்டில் நடந்து வரும் முதல் டெஸ்டில் நேற்று அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (1809 ரன், 20 டெஸ்ட்), வி.வி.எஸ்.லஷ்மண் (1236 ரன், 15 டெஸ்ட்), ராகுல் டிராவிட் (1143 ரன், 15 டெஸ்ட்) ஆகியோர் இந்த சாதனையை வசப்படுத்தி உள்ளனர். கோஹ்லி ஆஸி. மண்ணில் விளையாடும் தனது 9வது டெஸ்டில் 1000 ரன் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie. 1000 ,Kohli , Run on 1000! Kohli is a great achievement
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு