அடிலெய்டு டெஸ்டில், ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 6 கேட்ச் செய்து அசத்தினார். இதன் மூலமாக இந்திய அணி விக்கெட் கீப்பர் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் பிடித்த அதிகபட்ச கேட்ச் எண்ணிக்கையை அவர் சமன் செய்துள்ளார். கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்ப், டிம் பெய்ன், ஸ்டார்க், ஹெட், ஹேசல்வுட் ஆகியோரது விக்கெட் வீழ்ச்சியில் அவர் சிறப்பாக பங்களித்தார். முன்னதாக, எம்.எஸ்.டோனி 2009ம் ஆண்டு வெலிங்டனில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி