கறிவேப்பிலை மீன் குழம்பு

செய்முறை : முதலில் மீனுடன் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். வறுக்க கொடுத்த பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும். தொடர்ந்து வதக்க வேண்டியவற்றை பச்சை வாசனை போக நன்றாக வதக்கி ஆற வைக்கவும். வறுத்த, வதக்கிய பொருட்களை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்ததும், மீனை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். கறிவேப்பிலை மீன் குழம்பு ரெடி

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: