எக் நூடுல்ஸ்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி, அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நீர் நன்கு கொதிக்கும்போது, அதில் நூடுல்ஸை சேர்த்து ஒரு  கொதி விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி தனியாக வைத்து கொள்ளவும்.மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் காய்கறிகளை போட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். அடுத்து சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.  பின்னர் நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். அப்புறமென்ன குட்டீஸ்... என்ஜாய்...!

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: