காளான் குருமா

செய்முறை :

முதலில்  காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு கழுவி பெரிய துண்டுகளாக  வெட்டவும். தேங்காய்த்துருவல், கசகசா, பெருஞ்சீரகத்தை மிக்ஸியில் போட்டு  தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை  பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு  தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு  வதக்கவும்.  வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளியை சேர்த்து  வதக்கவும்.தக்காளியுடன் காளானை சேர்த்து நன்கு வதக்கி, மல்லித்தூள்,  மிளகாய்த்தூள், மஞ்சள்  தூள் சேர்த்து கலக்கி, தேவையான அளவு தண்ணீர், உப்பு  சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரைத்த தேங்காய்த்துருவலை சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க வைத்து,  கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான காளான் குருமா ரெடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: