தாலுகா அலுவலக வளாகத்தில் மாட்டு தொழுவமாக மாறிய அரசு கட்டிடம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆற்காடு: ஆற்காடு கஸ்பா பகுதியில் தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம்,  மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மத்திய அரசின்  புள்ளியியல் துறை அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.  மேலும் இந்த வளாகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. துணை கருவூலம், மலேரியா ஒழிப்பு அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள்,  பத்திரப்பதிவு அலுவலகமும்  செயல்பட்டு வந்தது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா போலீஸ் ஸ்டேஷன்  ஆற்காடு அடுத்த  பூங்கோடு பகுதியில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பத்திரப்பதிவு அலுவலகமும் மாவட்ட சாரணர் பயிற்சி மையம் அருகே மாற்றப்பட்டது.  பழைய போலீஸ் ஸ்டேஷன்  கட்டிடம் பயன்படுத்தப்படாமல்  உள்ளது. அந்த கட்டிடத்தில் அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் மாடுகளை கட்டி மாட்டு தொழுவமாக மாற்றியுள்ளனர்.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை உள்ளது. இந்த இடத்தின் அருகே ஆற்காடு நீதிபதி வீடு, மாணவர்கள் தங்கும் விடுதியும் உள்ளது. துர்நாற்றத்தால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாட்டு தொழுவமாக உள்ள அரசு கட்டிடத்தை சீரமைத்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காளையார்கோவிலில் வீணாகும் அரசு கட்டிடம் இரவில் பாராகும் அவலம்